"உங்கள் எண்ணங்களை பொறுத்தே உங்களுக்கு கூலி வழங்கப்படும்"

பிரிட்டனின் மத ஒப்பீட்டு ஆய்வாளர் புனித இஸ்லாத்தை ஏற்றார்
பிரித்தானியாவின் பிரபல மத ஒப்பீட்டு ஆய்வாளரான அன்னா கென்னடி புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

பலஸ்தீனுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் பலஸ்தீன் முஸ்லிம் புலமையாளர்கள் சங்கத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக கூறியுள்ளார்.

தொழுகை.

பிற சமுதாயத்தாரிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவதே தொழுகை. (எனவே அத்)தொழுகையை முடிந்த வரை தங்களிடத்தே நிலை நிறுத்துங்கள்.

முடிந்தவரை ஈமான், ஈமானிய எண்ணங்களுடன் வாழ்வதோடு, வியாபாரம் பிற தேவைகளிலும் குர்ஆன், ஹதீஸை பின் பற்றுங்கள்.


தாங்கள் அறிந்துள்ள மார்க்க விஷயங்களை ஏதுமறியா, இறைச்சிந்தனையுள்ள முஸ்லிம் சமுதாயத்திடமும், ஏனைய பிற சமுதாயத்தாரிடமும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் மேலும் மார்க்க மற்றும் பொது விஷயங்களை அறிந்து கொள்ள இது வழி வகுக்கும்.

நாம் ஒரு தூய முஸ்லிமாக வாழ்வதில் பெருமிதம் கொள்வதோடு, நம்மைப் பார்த்து மார்க்கத்தின்பால் மாற்றாரைக் கவர்ந்து அவர்களும் முஸ்லிமாக வாழ்ந்திட ஏவுபவராக இருங்கள்.

தான, தர்ம விஷயங்களிலும், ஜகாத் முறைப்படி கணக்கிட்டு வழங்குவதிலும், பெரியோரைப் பேணுதலிலும் அல்லாஹ்வை அஞ்சி நடங்கள்.

திருமண நெறி முறைகளை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியவாறு சிக்கனத் திருமண முறைகளைக் கையாளுங்கள். ஆண்கள் கைக்கூலி கேட்டுப் பெறுவதை அறவேத் துறந்து மணப்பெண்ணின் விருப்பமறிந்து மஹர் கொடுத்து திருமணம் செய்வதை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள். (இது நமக்கு நாமே கொண்டாடிக் கொள்ளும் இலட்சியமல்ல. இதுவே இறைவனின் தூதர் காட்டித்தந்த அழகிய முறை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்).

பகுத்தறிவளித்து நம்மைப் பிற உயிர்களிடத்திலிருந்து மிகவும் வேறுபடுத்திக்காட்டி இம்மை, மறுமை வாழ்வின் நிலையை அறியச் செய்த இறைவனையே வழிபடுங்கள். அவனுக்கு இணை வைக்காதீர்கள்.

இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடையாகிய நபி(ஸல்) அவர்களின் உண்மை வழிமுறையை மட்டும் பின்பற்றுங்கள்.

பேஸ்புக் சகோதரிகளுக்கு எச்சரிக்கை!


பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
அன்பின், சினிமா தார‌கைக‌ளின் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் த‌ம‌து சொந்த‌ப் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் பாவிக்கும் ச‌கோத‌ரிக‌ளுக்கு,
ப‌ர‌ந்து விரிந்த‌ இணைய‌த்த‌ள‌த்தில் உங்க‌ளை பிர‌தி நிதித்துவ‌ப்ப‌டுத்துவ‌தே உங்க‌ள் புகைப்ப‌ட‌ங்க‌ள் தான்…
அது ஒரு புற‌ம் இருக்க‌ ஒரு சில‌ கேள்விக‌ளை கேட்க‌ நினைக்கின்றேன்.!!

மூளைக்கு சுய அறிவில்லை

டாக்டர் யு. ஷேக் அலாவுதீன்
கோமா என்னும் சுய நினைவு இல்லாமல் இருக்கும் ஒரு நோயாளியைப் பற்றி டாக்டரிடம் விவரம் கேட்டால் அவர் சொல்லும் பதில் மூளை செயல்படவில்லை என்பது தான். அதன் பொருள் மூளை செயல்படவில்லை அதனால்தான் அவர் கோமா நிலைக்கு வந்துவிட்டார் என்பதாகும்.
மூளை செயல்படவில்லையே அப்படியானால் அதை உடலை விட்டு அகற்றிவிடலாமா என்று கேட்டால்? பல உறுப்புக்களை அறுத்து எறியும் இவர்கள் அதற்கு துணிவதில்லை. காரணம் மூளையை அப்புறப்படுத்தினால் அடுத்தது மரணம் தான். செயல்படாத மூளையை அப்புறப்படுத்தினால் மரணம் ஏன் ஏற்படுகின்றது?
கோமாவிற்கு அர்த்தம் தவறாக புரிந்துக் கொண்டு செயல்படுவதால் தான் இந்த குழப்பம். மூளை செயல்படாத காரணத்தினால் தான் கோமாவா?
மூளைக்கு ஒன்றும் தெரியாது. கண்ணை மூடி உட்கார்ந்திருக்கிறீர்கள் ஒருவர் உங்கள் கையை கிள்ளுகின்றார் என்று

குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க முயன்ற டாக்டர் மில்லர் கண்ட அதிசயங்கள்..

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார்.
அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.

உள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய

உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.
இந்த உயரிய பண்பை பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை முதலில் பார்ப்போம்:
இறையச்சத்தின் அவசியம்:
அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள், இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்”. (21: 49).
உள்ளச்சம் இறைத்தூதர்களின் பண்பாகும்:
(இறைதூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள், அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள், அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்பட மாட்டார்கள், ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.” (33: 39).
Post image for காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.
காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.
பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.

தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள்


‘பிலாலே! தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்). “எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் உள்ளது” (நஸாஈ). இது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதரின் கூற்றுகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதியும், கண்குளிர்ச்சியும் இருக்க முடியும் என்பதை இக்கூற்றுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இன்றைய நமது தொழுகையின் நிலையை கொஞ்சம் மீழ் பரிசீலனை செய்து பார்ப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் கடமைபட்டிருக்கின்றோம். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா?


முஸ்லிம் பாடசாலைகள் விடுமுறைக்காகமூடப்படுகிறது  

 

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்த பின் முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக நாளை செவ்வாய்க்கிழமை 17ம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜயரட்ண அறிவித்துள்ளார்.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆகஸ்ட் 22ம் திகதி திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழ், சிங்கள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஆகஸ்ட் 03ம் திகதி மூடப்பட்டு மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக செப்டம்பர் 03ம் திகதி திறக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.
இதேவேளை ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 26ம் திகதி இடம்பெறுமெனவும் க.பொ.த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 06ம் திகதி ஆரம்பமாகுமெனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஜயந்த புஸ்பகுமார அறிவித்துள்ளார்.


மது, பன்றி இறைச்சி, மரணம் - பர்மா முஸ்லிம்களுக்கு பெளத்த பயங்கரவாதிகள் கொடுத்த பரிசு


கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.

முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரங்களை குறித்து ஆயிஷா ஸூல்ஹி அல் வதனுல் மிஸரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்  கூறியது: பெளத்த மதத்தைச் சார்ந்த
பயங்கரவாதிகள் அங்குள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம்பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால்முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

அனைத்து மதங்களும் நன்மையையே போதிக்கும் போது ஏன் இஸ்லாத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும்?



மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:
  
கேள்வி எண்: 19
உலகில் உள்ள எல்லா மதங்களும் – நல்லதையே செய்ய வேண்டும் – நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது – ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!

பதில்:
1. இஸ்லாமிய மார்க்கத்திற்கும் – பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:


இணைப்பதும் பிளப்பதும் நாவுதான்!

சுப்யான் பின் அப்துல்லாஹ் ஸகஃபி(ரலி) அறிவிக்கின்றார்கள்: நான்  நபிகளாரிடம், “”ஆபத்துமிக்கவையாக எனக்கு நீங்கள் எடுத்துரைத்தவற்றில் எல்லாவற்றையும் விட மிக அதிக ஆபத்துமிக்கது எது?” எனக் கேட்டேன்.  நபி(ஸல்) அவர்கள் தம்முடைய நாவைப் பிடித்துச் சொன்னார்: “இது’        நூல் : திர்மிதி
நாவைத் தவறாகப் பயன்படுத்துவதால் விளைகின்ற குழப்பமும் கலகமும் மிகக் கொடியவை என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அதனை எவரும் மறுக்கவும் மாட்டார்கள். ஒருவர் நாவால் மொழிகின்ற ஒவ்வொரு சொல்லும் பாதிப்பை

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு..!


- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) -
புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும்.

உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் புதிய சமூக வலைத்தளம் 'salam world' ரமழானில் அறிமுகம்!



பேஸ்புக்,ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணையத்தளம் வருகின்ற ரமழான் மாதம் அறிமுகமாகவுள்ளது.
ஹலால் சம்மந்தமான இந்த இணையதளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – 'Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத்தளமாகவும், பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது


இஸ்லாத்தின் பார்வையில் உலகவாழ்க்கை!

-ஆலிஃப் அலி இஸ்லாஹி-
[மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோஇச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப் போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாகஅவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் நமது பணிஎன்ன என்பதை விளங்கவேண்டும்.

இறைவனது அருட்கெடைகளையெல்லாம் பூரணமாக அனுபவித்துவிட்டுசெருக்குக் கொள்கின்றான். ஆடம்பரத்தில் ஆடுகின்றான். இறைவனையும் நிராகரிக்கின்றான். அவனது பார்வையில் உலகம் என்பது வெறுமனே இன்பமனுபவித்துவிட்டுச் செல்லும்


கண் பார்வை அற்றவர்களுக்கு உதவும் நவீன கருவி அறிமுகம் 




கண்பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் வர்ணங்களை இனம்கண்டு அதற்கு ஏற்றவாறு மாறுபட்ட இசையை உருவாக்கக் கூடிய Eye Music எனும் நவீன கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இக்கருவியானது ஜெருசலேம் நகரிலுள்ள ஹேப்றி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐந்து வகையான நிறங்களை இனம்கண்டு அவற்றிற்குரிய சமிக்ஞைகளை ஒலி வடிவில் கொடுப்பதற்கென இசைகளை உள்ளடக்கியதாக இக்கருவியில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.


சுகாதார செய்தி
புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு சில வழிகள்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. ஆனால் அதை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயல்.
பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளும் தெரியும், அதைவிட நிறுத்துவது கடினம் என்பதும் நன்றாக தெரியும்.
ஏனெனில் அதற்கு அடிமை ஆகிவிட்டால் அதை நிறுத்தும் போது பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வாறு அதற்கு அடிமை ஆனவர்கள் நிறுத்த நினைக்கும் போது புதிதாக ஒரு சில பழக்கத்தை மேற்கொண்டால், ஈஸியாக அதனை நிறுத்தலாம்.
1. சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது.
எப்படியென்றால் அந்த சிகரெட்டில்



வித்தியாசமான தருணத்தில் எடுக்கப்பட்ட அழகான விலங்குகளின் புகைப்படத் தொகுப்பு


பொதுவாக காட்டிலும், வீட்டிலும் காணப்படும் விலங்குகள் பெரிதாகவும் சிறிதாகவும் பல அளவுகளில் இருக்கும். நட்புடன் பழகும் சில விலங்குகளை நாம் வீட்டில் வளர்த்து மகிழ்கிறோம்.


மேலும் இவ்வாறான விலங்குகள் மிகவும் அழகாகவும், நமக்கு மிகவும் பிடித்தமானதாகவும் காணப்படுகிறது. அவ்விலங்குகளை அழகான தருணத்தில் எடுத்திருக்கும் புகைப்படத்தைக் காணலாம்.

உங்கள் வருகைக்கு நன்றி