"உங்கள் எண்ணங்களை பொறுத்தே உங்களுக்கு கூலி வழங்கப்படும்"

அல்லாஹ்

உண்மையை உள்ளபடி அறிய அல்லாஹ் உதவிபுரிவானாக 

அல்லாஹ்
நாம் நமது பெற்றோர்உடன் பிறந்தவர்கள்சொந்த பந்தங்கள்ஊர் உலக மக்களை அறிந்துவைத்திருக்கும் அளவுக்குக் கூட நம்மைப் படைத்தரப்புல் ஆலமீனைப் பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைஎனவே அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழ்க்காணும் தலைப்புகளில்அறிந்து கொள்ளுங்கள்.
·                    


அல்லாஹ் எங்கே இருக்கிறான்
அல்லாஹ் எங்கே இருக்கிறான்

அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷின் இருக்கிறான். இதற்கான சான்றுகள் வருமாறு.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா?அப்போது (பூமி) நடுங்கும்.

(அல்குர்ஆன் 67:16)


நபி(ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்என்று கேட்டார்கள். அப்பெண்அல்லாஹ் வானத்தி­ருக்கிறான் என்று கூறினாள். நான் யார்எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ரலி­) - நூல் : முஸ்லி­ம் (836)

அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான். துரும்பிலும் இருக்கின்றான் என்று நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.



அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?
அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?



அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்” என்று அவன் கூறினான். 
(அல்குர்ஆன் 20:46) 

இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதன் கருத்து அவன் நம்மைக் கண்காணித்து நாம் செய்யும் செயல்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்வான் என்பதாகும்.

அர்ஷ்
அர்ஷ் என்பது அவனுடைய பிரம்மாண்டமான ஆசனமாகும்.



ஏழு வானங்களுக்கும் அதிபதிமகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! 

(அல்குர்ஆன் 23:86)

وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

அவனது ஆசனம் வானங்களையும்பூமியையும் உள்ளடக்கும்.  

(அல்குர்ஆன் 2:255)




அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். 

(அல்குர்ஆன் 69:17)

அல்லாஹ்வின் தோற்றம்

அல்லாஹ்வின் தோற்றம்

இறைவன் உருவமற்றவன் என்பது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.

அல்லாஹ்விற்கு  உருவம் இருக்கிறது. அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.


அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். 
(அல்குர்ஆன் 75:22,23)

மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான்.

அறிவிப்பவர் :  அபூஸயீத் அல்குத்ரீ(ர­லி)நூல் : புகாரீ (7439)

இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.


அல்லாஹ் கூறுகிறான்
 :
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்பார்ப்பவன். 

(அல்குர்ஆன் 42:11)


அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா?

அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா?

இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது

அல்லாஹ் கூறுகிறான் :



அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். 

(அல்குர்ஆன் 6:103)

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்துஅவரிடம் அவரது இறைவன் பேசிய போது என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். அதற்கு (இறை வன்) என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” எனக் கூறினார் (அல்குர்ஆன் 7:143)
நபி(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டாஎன்று கேட்கப்பட்டபோது அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பார்க்கமுடியும் என்று கூறினார்கள்.


அறிவிப்பவர் : அபூதர் (ரலி­) நூல் : முஸ்லி­ம் (261)


மறுமையில் நல்லடியார்கள் இறைவனைக் காண்பார்கள்.




அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். 
(அல்குர்ஆன் 75:22,23)
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் சிலர் அல்லாஹ்வின்தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமாஎன்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் ஆம்! காண்பீர்கள். மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரையொருவர் முண்டியடிப்பீர்களாஎன்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேகமே இல்லாத பவுர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவினைப் பார்ப்பதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களாஎன்று கேட்டனர். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் முண்டியடித்துச் செல்லாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் முண்டியடிக்க மாட்டீர்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ர­லி) நூல் : புகாரீ (4581)
காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள். 

அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள். 



அழகிய திருநாமங்கள்

அழகிய திருநாமங்கள்



அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப் படுவார்கள்.

(அல் குர்ஆன் 7:180)


அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவ னுக்கு அழகிய பெயர்கள் உள்ளன” என்று (முஹம்மதே!) கூறுவீராக! உமது பிரார்த் தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெது வாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

(அல்குர்ஆன் 17:110)



அவன் ஒருவனே

அவன் ஒருவனே

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.



(அல் குர்ஆன் 2:163)

தன்னைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை’ என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்களும்,  நீதியை நிலை நாட்டும் அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்). அவனைத்  தவிர  வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. (அவன்) மிகைத்தவன்,ஞானமிக்கவன்.

(அல் குர்ஆன் 3:18)



அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ்.  அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்’ 

(அல் குர்ஆன் 6:102)


அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடைய (இறை) வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்” என்று கூறுவீராக!

(அல் குர்ஆன் 17:42)



அல்லாஹ்வுக்கு பலவீனங்கள் இல்லை

அல்லாஹ்வுக்கு பலவீனங்கள் இல்லை

மறதி




(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும்பின்னுள்ளதும்அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை.
279 (என்பதை இறைவன் கூறச் சொன்னதாக ஜிப்ரீல் கூறினார்)


(அல் குர்ஆன் 19:64)




'அது பற்றிய ஞானம் எனது இறை வனிடம் (உள்ளபதிவேட்டில் இருக்கிறதுஎன் இறைவன் தவறிடமாட்டான்மறக்கவும் மாட்டான்.’ என்று அவர் கூறினார்

(அல் குர்ஆன் 20:52)


பசிதாகம்



வானங்களையும்பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி  வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக்கொள்வேனா?  அவனே உணவளிக்கிறான்அவன் உணவளிக்கப்படுவதில்லை  என்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறும் இணை கற்பித்தோரில் ஒருவனாக ஆகி விடக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனவும் கூறுவீராக

(அல் குர்ஆன் 6:14)




நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நாடவில்லை.

(அல் குர்ஆன் 51:57)

அவனுக்கு உதவியாளன் இல்லை




சந்ததியை  ஏற்படுத்திக்  கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்ஆட்சியில் அவனுக்கு பங்காளிஇல்லைஉதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை’” என்று (முஹம்மதே!)  கூறுவீராகஅவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக!

(அல் குர்ஆன் 17:111)



தேவையற்றவன்



நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும்பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 

(அல்குர்ஆன் 2: 267)


வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
அல்லாஹ் புகழுக்குரியவன். தேவையற்றவன். 

(அல்குர்ஆன் 22:64)


மனைவி


(அவன்) வானங்களையும்பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும் அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 6 :101)

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

(அல்குர்ஆன் 72:3)


மகன்



அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான் எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன்.

(10. வானகளிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபனிகின்றன)

(அல்குர்ஆன் 2:116)



அல்லாஹ் ஒருவன் என கூறுவீராக!
 அல்லாஹ் தேவைகளற்றவன்.
 (
யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்)பிறக்கவுமில்லை.
 அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல் குர்ஆன் 112: 1-4)


பெண் மக்கள்


ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன்.

10.அவர்கள் வர்ணிப்பதை விட்டும் உயர்ந்து விட்டான்.
(அல்குர்ஆன் 6:100)


அல்லாஹ்வுக்கு புதல்வியரைக் கற்பனை செய்கின்றனர். அவன் தூயவன். (10.அவர்களுக்கோ அவர்கள் ஆசைப்படுவது (ஆண்குழந்தை) வேண்டுமாம்!)

(அல்குர்ஆன் 16:57)

அவனுக்கு பெண் குழந்தைகளும் உங்களுக்கு ஆண் குழந்தைகளுமா?

(அல்குர்ஆன் 52:39)


அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்து விட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களது கூற்று பதிவு செய்யப் பட்டு விசாரிக்கப்படுவார்கள்.

(அல்குர்ஆன் 43:19)



அவனுக்கு நிகராக எவரும் இல்லை

அவனுக்கு நிகராக எவரும் இல்லை



''அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் அமைத்தான் 288வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான் அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக(பூமியிலிருந்துவெளிப்படுத்தினான்.  எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராகஎவரையும் கற்ப்பனை செய்யாதீர்கள்.

(அல் குர்ஆன் 2:22)



எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியனஅவனுக்கு நிகரானவன் இல்லை.  இவ்வாறே கட்டளையிடப்பட்டுள்ளேன்முஸ்லிம்களில்  நான் முதலாமவன் என்றும் கூறுவீராக!

(அல் குர்ஆன் 6:162-163)


அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொருபொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

(அல் குர்ஆன் 25:2)





(அவன்) வானங்களையும்பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தேஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். பூமியில் உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்;பார்ப்பவன்.

(அல் குர்ஆன் 42:11)


அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல் குர்ஆன் 16:74)





அதிகாரம் அனைத்தும் அவனுக்கே

  
கவலைக்குப் பிறகு உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத்
தந்தான். உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரைக் கவலை பிடித்துக் கொண்டது. அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமைக் கால எண்ணம் கொண்டனர். ""நாம் சரியான மார்க்கத்தில் தான் இருக்கிறோமா?’’ என்று அவர்கள் கேட்டனர். ""இம்மார்க்கம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது’’ என்று (முஹம்மதே) கூறுவீராக! உம்மிடம் வெளிப்படையாகக் கூறாததை தமது உள்ளங்களில் மறைத்துள்ளனர். ""சரியான மார்க்கத்தில் நாம் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம்’’ என்றனர். ""உங்கள் வீடுகளில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டோர் தமது களத்திற்குச் சென்றிருப்பார்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் சோதிப்பதற்காகவும்உங்கள் உள்ளங்களில் இருப்பதைத் தூய்மைப்படுத்தவும் இவ்வாறு செய்தான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்’’ எனக் கூறுவீராக!

(அல் குர்ஆன் 3:154)

கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.

(அல் குர்ஆன் 8:39)




அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள்.அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

(அல் குர்ஆன் 6:61)



""உங்களுக்காக எனக்குக் கொடுத்து அனுப்பப்பட்டதை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் தர முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்’’ (எனவும் கூறினார்)

(அல் குர்ஆன் 11:57)




அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் நிர்ணயிக்கப்பட்ட விதி .இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு அதை வழங்குவோம். நன்றியுடன் நடப்போருக்கு கூலி வழங்குவோம்.

(அல் குர்ஆன் 3:145)





அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான்நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம்எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்நுட்பமானவன்.

(அல் குர்ஆன் 31:34)

குழந்தையைத் தருபவன்




வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை) களை வழங்குகிறான். தான் நாடியோருக்குஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
அல்லது ஆண்களையும்பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்ஆற்றலுடையவன்.

(அல் குர்ஆன் 42:49-50)





என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என்இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!

(அல் குர்ஆன் 19:4-5)


செல்வத்தை வழங்குபவன்

  
தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும்பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(அல் குர்ஆன் 17:30)




""அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்கா விட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். ""அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்’’ என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில்
கூறலானார்கள்.

(அல் குர்ஆன் 28:82)

மழையைத் தருபவன்

மழையைத் தருபவன்



அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும்,திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரம்மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும்அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில்
பல சான்றுகள் உள்ளன.

(அல் குர்ஆன் 6:99)




அவனே வானத்திலிருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு.நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்கள் அதனால் கிடைக்கின்றன.

(அல் குர்ஆன் 16:10)




(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையாஅல்லது) வானங்களையும்பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய
இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்

(அல் குர்ஆன் 27:60) 



  
""வானத்தி-ருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?’’ என்று அவர்களிடம் நீர் கேட்டால் ""அல்லாஹ்’’ என்றே கூறுவார்கள். ""அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’’ என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(அல் குர்ஆன் 29:63)


ஆட்சியைத் தருபவன்

ஆட்சியைத் தருபவன்



' 
""அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவீராக!

(அல் குர்ஆன் 3:26)

நோய் நிவாரணம் தருபவன்

 நோய் நிவாரணம் தருபவன்



அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

(அல் குர்ஆன் 6:17)


நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

(அல் குர்ஆன் 26:80)



பாவங்களை மன்னிப்பவன்

பாவங்களை மன்னிப்பவன்
                                                                                                                                                                              


அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோதமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(அல் குர்ஆன் 3:135)



தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல் குர்ஆன் 39:53)


நேர்ச்சை

நேர்ச்சை


நீங்கள் எதையேனும் (நல் வழியில்) செலவிட்டாலோநேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை

(அல் குர்ஆன் 2:270)




""இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்அறிந்தவன்’’ என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக!

(அல் குர்ஆன் 3:35)


நீர்உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ""நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்’’ என்று கூறுவாயாக

(அல் குர்ஆன் 19:26)

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை33 தவாஃப் செய்யட்டும்.

(அல் குர்ஆன் 22:29)



அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப்1 பற்றி அஞ்சுவார்கள்.

(அல் குர்ஆன் 76:7)


அறுத்துப் பலியிடுதல்

அறுத்துப் பலியிடுதல்
                                                                                                                               


தாமாகச் செத்தவைஇரத்தம்பன்றியின் இறைச்சிஅல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும்வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்;நிகரற்ற அன்புடையோன்

(அல் குர்ஆன் 16:115



1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.
2. எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!
3. உமது எதிரி தான் சந்ததியற்றவன்.

(அல் குர்ஆன் 108:1-3)


பிரார்த்தனை

பிரார்த்தனை

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ""நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்’’ (என்பதைக் கூறுவீராக!)

(அல் குர்ஆன் 2:186)




அப்போது தான் ஸக்கரிய்யா ""இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்’’ என்று தம் இறைவனிடம் வேண்டினார்.

(அல் குர்ஆன் 3:38)


  
 ""இதிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றினால் நன்றி செலுத்துவோராக இருப்போம்’’ என்று பணிவாகவும்இரகசியமாகவும் அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது ""தரை மற்றும் கடன் இருள்களி-ருந்து உங்களைக் காப்பாற்றுபவன் யார்?’’ என்று கேட்பீராக!

""இதிலிருந்தும்ஒவ்வொரு துன்பத்தி-ருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்’’ என்றும் கூறுவீராக!

(அல் குர்ஆன் 6:63-64)
                                                                                                                         


"எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்’’ எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்துஅவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!

(அல் குர்ஆன் 7:29)\



அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும்,சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன.  அவனே அல்லாஹ்உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள்அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

(அல் குர்ஆன் 35:13)


மறைவான ஞானம் இறைவனுக்கே

மறைவான ஞானம் இறைவனுக்கே



மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும்கட-லும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும்ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

(அல் குர்ஆன் 6:59)


""வானங்களிலும்பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்’’ என்று கூறுவீராக!

(அல் குர்ஆன் 27:65)



அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான்நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம்எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்நுட்பமானவன்.

(அல் குர்ஆன் 31:34)



உங்கள் வருகைக்கு நன்றி